துலிப் சிஃபான் நீர் வடிகட்டி

From Akvopedia
Jump to: navigation, search

பேசிக் வாட்டர் நீட்ஸ் துலிப் சிஃபான், துலிப் டேபில் டாப், துலிப் குரூப் ஃபில்டர் ஆகிய மூன்று வகை வடிகட்டிகளை வடிவமைத்துள்ளது. எளிதானது, கட்டுப்படியானது, எளிதில் கிடைக்கக்கூடியது என்ற பேசிக் வாட்டர் நீட்ஸின் அடிப்படை கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது துலிப் தொழில்நுட்பம். துலிப் தொழில்நுட்பத்தின் நம்பக்கன்மையை எங்களது ஆய்வுக்கூடங்களிலும், வெளிநாடுகலில் உள்ள பல்வேறு புகழ்பெற்ற அமைப்புக்களாலும் சோதனை செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டதே.

துலிப் சிஃபான்

Tulip siphon.png

துலிப் சிஃபானானது எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய நீர் சுத்திகரிப்பு கருவியாகும். மணிக்கு 4 முதல் 5 லிட்டர் தண்ணீரைச் சுத்திகரிக்க முடியும். இதன் வடிகட்டி தினசரி பயன்பாட்டுக்கும் அவசர நிலைகளிலும் கூட பயன்படுத்தக்கூடியது. வடிகட்டி சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்தும் வகையிலான பேக்வாஷ் இயங்குமுறை இதன் ஒப்பற்ற சிறப்பம்சமாகும். துலிப் சிஃபான் 7000 லிட்டர் தண்ணீரை வடிகட்டிய பிறகு இதில் உள்ள கேன்டிலை எளிதில் மாற்றி விட்டு மீண்டும் பயன்படுத்தலாம்.

சிறப்பு அம்சங்கள்

 • நுண்ணுயிர்க்கிருமிகளை அகற்றல்: 99,995%
 • கலங்கிய நீரை சரி செய்தல்: 99%
 • புரோடோசோவாவை அகற்றல்: 99%
 • ஒழுக்கு வீதம்: மணிக்கு 5 லிட்டர்
 • கொள்ளளவு: 7,000 லிட்டர்
 • பேக் வாஷ்: ஆம்
 • விலை (லிட்டருக்கு) : $0,002-$0,005
 • தேவைப்பாடு: வீட்டுப்பயன்பாட்டுக்கும், அவசரத்தேவைகளுக்கும்


துலிப் டேபில் டாப்

Tulip tabletop.png

துலிப் டேபில் டாப்பானது இரண்டு தொட்டிகளைக் கொண்ட நீர் வடிகட்டி மற்றும் கொள்கலன் ஆகும். மேலே உள்ள தொட்டியில் அசுத்தமான நீரை நிரப்பினால், அது துலிப் கேன்டில் மூலம் வடிகட்டி கீழை உள்ள தொட்டிக்கு வந்து சேரும். கீழே உள்ள தொட்டியில் இருந்து கிடைப்பது உடனடியாக பயன்படுத்தக்கூடிய சுத்தமான குடிநீர் ஆகும். கீழே உள்ள தொட்டியில் உள்ள நீரை எத்தனை நாள் வேண்டுமானாலும் பாதுகாப்பாக கொள்முதல் செய்து கொள்ளலாம். சுத்தம் செய்வதற்கான நாரும் வழங்கப்படுகிறது. துலிப் டேபில் டாப் தொடர்ந்து 7000 லிட்டர் வரையிலும் பயன்படுத்தலாம். அதன் பிறகு கேன்டிலை எளிதில் மாற்றி அமைத்து மீண்டும் பயன்படுத்தலாம்.

சிறப்பு அம்சங்கள்

 • நுண்ணுயிர்க்கிருமிகளை அகற்றல்: 99.995%
 • கலங்கிய நீரை சரி செய்தல்: 99%
 • புரோடோசோவாவை அகற்றல்: 99%
 • ஒழுக்கு வீதம் 1 கேன்டில்: மணிக்கு 3 லிட்டர்
 • ஒழுக்கு வீதம் 3 கேன்டில்கள்: மணிக்கு 9 லிட்டர்
 • கொள்ளளவு: 7,000 லிட்டர்
 • பேக் வாஷ்: இல்லை
 • விலை (லிட்டருக்கு): $0,002-$0,005
 • தேவைப்பாடு: வீடு மற்றும் பள்ளிக்கூடங்களில் பயன்படுத்தக்கூடியது


துலிப் குரூப் ஃபில்டர்

Tulip groupfilter.png

துலிப் குரூப் ஃபில்டர், சுத்திகரிக்கப்படாத நீரை ஒரு தொட்டியில் ஊற்றி பின்னர் அந்த நீரை 3 துலிப் வடிகட்டிகளின் மூலம் சுத்திகரிக்கும் நீர் சுத்திகரிப்பு கருவி இது. இதன் ஃபாஸ்ட் ஃப்லோ கேன்டில்கள் வழியாக மணிக்கு 15 லிட்டர் வரையில் நீரோட்டம் ஏற்படுத்தலாம். சுத்திகரிக்கப்பட்ட நீரை உடனடியாக பயன்படுத்தலாம். மேலும் சுத்திகரிக்கப்பட்ட நீரை பிறகு பயன்படுத்துவதற்காக கொள்முதல் செய்து கொள்ளவும் முடியும். ஃபாஸ்ட் ஃப்லோ மாடலை சுத்தம் செய்தவற்காக பேக்வாஷ் அமைப்பும் ஏற்படுத்த முடியும்.

சிறப்பு அம்சங்கள்

 • நுண்ணுயிர்க்கிருமிகளை அகற்றல்: 99.995%
 • கலங்கிய நீரை சரி செய்தல்: 99%
 • புரோடோசோவாவை அகற்றல்: 99%
 • ஒழுக்கு வீதம்: மணிக்கு 15 லிட்டர்
 • கொள்ளளவு: 21,000 லிட்டர்
 • பேக் வாஷ்: இல்லை
 • விலை (லிட்டருக்கு): $0,002-$0,005
 • Applicability: schools, groups தேவைப்பாடு: பள்ளிக்கூடங்கள் மற்றும் குழுக்களுக்கு உகந்தது.


BWN தொடர்புக்கு

Basic Water Needs

HEAD OFFICE, THE NETHERLANDS
Leidsegracht 6
1016 CK
Amsterdam, Netherlands
Call: +31 85 488 47 52

Basic Water Needs India Pvt Ltd
புதுச்சேரி, தமிழ்நாடு, இந்தியா
தொலைபேசி: +91 413 26 55 963

இந்த கட்டுரை பிற மொழிகளில்